ஒரே கடல் : ஒரு முழுமையான திரைப்படம் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • ஒரே கடல் : ஒரு முழுமையான திரைப்படம்

    ஒரே கடல் : ஒரு முழுமையான திரைப்படம்

             எந்த ஒரு படைப்பையும் அதை அனுபவித்து முடிகிற அந்த தருணத்தில் கிடைக்கிற நிறைவான உணர்வுக்கு ஈடான ஒன்று வேறெதிலும் இல்லை எனலாம். ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து தீர்த்து விட முடியாத பலவற்றை நாம் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் கண்டடைகிறோம். இவ்வகையான அனுபவங்கள் நமக்குள்ளாக கிளர்த்தும் உணர்வெழுச்சியை முழுமையாக வரிகளில் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. சிலவற்றை பார்த்து, அனுபவித்து மட்டுமே உணர இயலும். அப்படியான படங்களில் ஒன்றுதான் ‘ஒரே கடல்‘ மாற்றத்தை அறிய முடியாமல், அதே நேரம் நம்முள் மாற்றம் நிகழ்ந்து விடுவதை வாழ்வின் பல தருணங்களில் உணர்கிறோம்.

            ஒரு பூ மலர்வதற்கு ஒப்பானது நம் வாழ்வின் மாற்றங்கள். புதிதாக சிலரை சந்திக்கும் பொழுதுகளிலும், அவர்களோடு ஈர்ப்பும் பிரியமுமாக நம் போக்கு மாறுவதும் இது போலத்தான். நினைவுகளில் உலாவும் சம்பவங்களின் ஊடாக சந்தோஷம், துக்கம் என நமக்குள் நிகழ்த்தும் உணர்வுச் சிதறல்கள் நம் மனப்போக்கையே மாற்றி விடுகிறது. சொற்ப சந்தோஷங்கள் மட்டுமே அனுபவிக்கக் கிடைக்கிற நம் வாழ்வில், அதையும் கூட கொண்டாடத் தெரியாமல், விட்டுக் கொடுப்பதும், சகிப்புத்தன்மையுமற்று, அவசரத்தில் நம் செய்கைகள் நம்மையும், நம் பிரியங்களையும் வறட்சியான வாழுலகிற்குள் தள்ளி விடுகிறது. பிரியம், அன்பு, பாசம், காதல், சந்தோஷம், பிரிவு இப்படியான உணர்வுகளுக்குள் ஆட்படாத மனித வாழ்க்கையே கிடையாது.

            மனிதனுக்கு மட்டுமின்றி விலங்குகளிடமும் இவ்வுணர்வுகள் இருப்பதை பல நேரங்களில் கண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையே நெகிழ்ச்சியான சம்பவங்களால் புனையப் பட்டது. உணர்வுவயப்படுதலே உண்மையான வாழ்க்கை. ‘ஒரே கடல்‘ படம் ஏற்படுத்துகிற உணர்வலைகள் நம்மை பலவாகவும் யோசிக்க வைக்கிறது. செயற்கைத்தனம் துளியுமற்ற இயல்பான இதுபோன்ற படங்களின் மீதான காதலை அதிகரிக்கிறது.

    ஒரே கடல் (2007):

             உறவுகள் மீதான பிடிப்பற்று தனக்கென நியதிகள் ஏற்படுத்திக் கொண்டு அறிவுஜீவியாக தனது வாழ்வை வரித்துக் கொண்டிருக்கும் பொருளியல் ஆய்வாளர் டாக்டர் நாதன் (மம்முட்டி). தீப்தி (மீரா ஜாஸ்மின்) நடுத்தர வர்க்க குடும்பப்பெண்.


           அவள் கணவன் ஜெயன் (நரென்) இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு. நாதனின் தோழி பெலா (ரம்யா கிருஷ்ணன்) வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்களை நேரடியாக சந்தித்திருப்பவள். கருத்து ரீதியாக எதிரெதிர் துருவங்களான நாதன், தீப்தி என்ற இருவருக்குமிடையே ஏற்படும் உறவும், அதையொட்டி இருவருக்குள்ளும் எழும் உளப் போராட்டங்களுமே ‘ஒரே கடல்‘ என்கிற இப்படம். மம்முட்டி, மீரா ஜாஸ்மின், நரென், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருவரின் இயல்பான நடிப்பும் சிறப்பாக வந்துள்ளது.


            2007 வெளியான இந்த மலையாள மொழி திரைப்படம் வங்காளத்தை சேர்ந்த எழுத்தாளர் சுனில் உபாத்யாய எழுதிய ‘ஹிராக் தீப்தி‘ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. கேரள எழுத்தாளர் எம்.பி.குமரன் அவர்களால் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட இந்நாவல் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு நாவலுக்கான பரிசு பெற்றுள்ளது.

       

              ஷ்யாம் பிரசாத் இயக்கிய இப்படத்திற்கு இசை ஓசெப்பச்சன். பாடல்களை பாம்பே ஜெயஸ்ரீ, ஸ்வேதா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை குறிப்பிடப்பட வேண்டியது.


    இப்படம் யு டியூபில் முழுவதும் காணக்கிடைக்கிறது.

    தரவிறக்கம் செய்து பார்க்க :



    பாடல்களை கேட்க:


    இப்படம் பெற்றுள்ள விருதுகள்:

    Selected in Indian Panorama as the opening movie,
    Selected to Rome (Italy) International Film festival showcased as one of the outstanding film from Asia in this festival,
    Film Festivals,
    O IFFI Indian Panorama -2007,
    Asiatic –Rome- 2008,
    Fribourg International Film Festival- Switzerland 2008,
    Indian Film Festival Los Angeles -2008,
    International Film Festival of Minneapolis -2008,
    Cine Del Sur – Granada, Spain -2008,
    Stuttgart Festival of Bollywood and Beyond (July-2008),
    Festival of Malayalam Films – Vollodoid, Spain (June -2008),
    International Film Festival of Kerala- 2007,
    Hyderabad International Film Fest,
    Pune International Film Festival,
    MAMI Festival – Mumbai,
    Habitat Film Festival – New Delhi,
    Asian Film Festival - Abudhabi
    Kerala State Award 2007 Second Best Film - Ore Kadal - Best Actress - Meera Jasmine,
    Best Background Score – Ouseppachan - Best Editor- Vinod Sukumaran,
    Dubai Amma Awards 2007 Best Movie - Ore Kadal - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine,
    Best Supporting Actress - Ramya Krishnan - Best Camera Man - Azhakappan,
    Best Music Director - Ouseppachan,
    IFFK 2007 Awards,
    NETPAC Award for the Best Malayalam Film,
    Fipresci Award for the Best Malayalam Film,
    Asianet Film Award 2007 Best Actor award – Mammootty - Best Actress award - Meera Jasmine,
    Film Critics Award 2007 Best Movie - Best Directior - Best Female Singer - Best Camera man,
    Best Sound Recorder.
    Vanitha Film Award 2007,
    Best Actor- Mammootty - Best Actress - Meera Jasmine,
    FOKANA Film Award 2007 Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine,
    Sify Award 2007 Best Movie - Ore Kadal - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine,
    Amrita Film Awards 2007 Best Directo r- Shyamaprasad - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine,
    Best Supporting Actress - Ramya Krishnan - Best Music Director :Ouseppachan,
    Best Female Singer : Shweta Mohan,
    Other Awards John Abraham Award for Ore Kadal,
    V.Santharam National Award for the Best Actress - Meera Jasmine,
    First Sreevidya Award for Best Actress -Meera Jasmine,
    Bollywood & Beyond 2008 (Stuttgart, Germany): Audience Best Film Award for Ore Kadal....


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out