சுவிஸ் வங்கியில் அம்பானி சகோதரர்கள் ரகசிய கணக்கு (கெஜ்ரிவால் தகவல்)
சுவிஸ் வங்கியில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி உள்ளிட்ட 700 இந்தியர்களுக்கு ரகசிய கணக்கு வைத்துள்ளதாக ஊழலுக்கு எதிரான அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் வெளியிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் தலா 100 கோடி ரூபாயை தங்களது ரகசிய சுவிஸ் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளதாகவும், அம்பானி சகோதரர்களின் தாயார் மற்றும் காங்கிரஸ் எம்.,பி. அனு டான்டன், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் உள்ளிட்ட 700 இந்தியர்கள்,சுவிஸில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியின் ஜெனிவா கிளையில் 6,000 கோடி ரூபாய் பணம் முதலீடு செய்துள்ளதாக கூறி, அது தொடர்பான பட்டியலை, கெஜ்ரிவால் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.
சுவிஸ் வங்கி கணக்குகளில் இந்தியர்களின் பணம் பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கெஜ்ரிவால், மத்திய அரசு கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் விதமாக நடந்துகொள்வதாகவும்,வெறும் கண்துடைப்புக்காகவே ஒரு சிலரிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் தமக்கு இந்த தகவலை அளித்ததே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு காங்கிரஸ் அமைச்சர்தான் என்றும் தெரிவித்த கெஜ்ரிவால்,ரிலையன்ஸ் நிறுவனம் - 500 கோடி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் கோயல் - 80 கோடி, டாபர் நிறுவன அதிபர் பர்மன் - 26 கோடி,மோடெக் சாப்ட்வேர் நிறுவனம் - 2,100 கோடி,காங்கிரஸ் எம்.பி. அனு டான்டனுக்கும், ராகுல் காந்தியின் நண்பர் சந்தீப் டான்டனுக்கும் சுவிஸ் வங்கியில் தலா ரூ.125 கோடி ரூபாய் முதலீடு உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியல் மத்திய அரசிடமும் உள்ளது.ஆனால் இதுவரை 150 பேரிடம் மட்டுமே சோதனை நடத்தப்பட்டுள்ளது.மற்றவர்களின் நிறுவனங்களில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை? மத்திய அரசு கறுப்பு பணம் பதுக்குவதை ஆதரிக்கிறது.
குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக ஊக்கப்படுத்துகிறது. கறுப்பு பணத்தை பதுக்குவதற்கு உதவி செய்த எச்.எஸ்.பி.சி. வங்கியும் குற்றவாளிதான். கறுப்பு பணம் வைத்திருப்பவர்களால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விளக்குவேன்.மத்திய அரசில் புதிதாக அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் ஒருவர், ராபர்ட் வதேரா குறித்த தகவலை வெளியிட்டதற்காக என்னை பாராட்டினார் என்று கெஜ்ரிவால் மேலும் கூறினார்.
ரிலையன்ஸ் மறுப்பு:
இதனிடையே தங்கள் குழுமத்திற்கு சுவிஸ் வங்கியில் 500 கோடி ரூபாய் இருப்பதாக கெஜ்ரிவால் கூறியுள்ள குற்றச்சாட்டை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மறுத்துள்ளது....
0 comments:
Post a Comment