ஜெனீவா :
சுவிஸ் வங்கிகளில் முடக்கப்படும் கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை, பகிர்ந்து கொள்ள, சுவிட்சர்லாந்து நாடு முன்வந்துள்ளது. இது தொடர்பான, தகவல் பகிர்வு ஒப்பந்தத்தில், கையெழுத்திட்டுள்ளதின் மூலம் இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் முக்கிய விஷயத்திற்கு, இனி, தீர்வு கிடைக்கும்.
வெளிநாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் பல லட்சம் கோடிகள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. பல்வேறு நாடுகளில், கறுப்பு பணக்தை முடக்க வசதியிருந்த போதும், சுவிஸ் வங்கிகளில் உள்ள ரகசியக் கணக்கு முறையில சேமிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.
கடந்த பத்தாண்டுகளில் அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் முடக்கிய பணம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட பல நாடுகள், ரகசியமாக முடக்கப்படும் பணம் தொடர்பான தகவல்களை, சுவிஸ் நாட்டிடமிருந்து பெறுவது கஷ்டமாக இருந்தது. ஏனெனில் சுவிஸ் வங்கி ரகசிய கணக்குமுறை, எளிதில் அணுக முடியாத சட்டதிட்ட நடைமுறைகளில் இருந்தது.
பல்வேறு நாடுகளுடன் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில், வங்கி கணக்கு விவரம் மற்றும் வருமான வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் சட்டப்பிரிவு ஒன்றை இணைத்து ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பல்வேறு நாடுகள் சம்மதம் தெரிவித்தன.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக, சுவிட்சர்லாந்து நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைப்பு (ஓ.இ.சி.டி.,) இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.குறிப்பாக, அமெரிக்கா தன் நாட்டைச் சேர்ந்தவர்கள் முடக்கிய பணம் குறித்த தகவலைப் பெற எடுத்த அதிரடி நடவடிக்கைகள் சுவிஸ் அரசை சற்று தளர வைத்தது. தொடர்ந்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தகவல் பரிமாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி முறையாக கோரிககைகள் வைத்தன.
இதில், சுவிஸ் வங்கியில் செய்யப்படும் முதலீடு தொடர்பாக, அனைத்து தகவல்களையும் , அந்தந்த நாடுகள் வருமான வரி வசூலிக்க உதவும் வகையில், பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்து தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், சர்வதேச நாடுகள் அமைப்பான ஓ.இ.சி.டி.,யின் சார்பில் 58 நாடுகள் கொடுத்த நெருக்கடி காரணமாக, மற்ற நாடுகளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ளமுன் வந்துள்ளது.
வரி தொடர்பான விஷயங்களில் பரஸ்பரம் உதவும் வகையில், தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில், இந்தியா, சுவிஸ் உட்பட 58 நாடுகள் நேற்று கையெழுத்திட்டுள்ளன. இதனால், இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், இங்கு முறைகேடாக பதுக்கி வைத்த நிதி குறித்த விஷயங்களை தானாக முன்வந்து சுவிஸ் நேஷனல் வங்கி இனி தரும்.
ரூ.9 ஆயிரம் கோடி :சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் முடக்கி வைத்த பணம், கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டின் படி 14,000 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. தற்போது 2012ம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது....
0 comments:
Post a Comment