தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மனிதராவார். 1930களில், வாகனங்களில் செல்வதே ஒரு தூரத்துக் கனவாகப் பல இந்தியர்களுக்கு இருந்த போது, முதல் கிராமப்புற பஸ் சேவையை மதுரையில் தொடங்க வேண்டுமென்று அவர் நோக்கம் கொண்டிருந்தார்.
அவர் வணிகத்தின் மீதும் மட்டுமல்லாமல், மனித சேவையிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரது புதுமையான தொலைநோக்கு சிந்தனைகளும், கடின உழைப்பும், உறுதியும் ‘டி.வி. சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்’ அமைக்க உதவியாக இருந்தது. இதன் மூலமாக இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, ஒரு அடித்தளத்தை அமைத்தார். தி.வே.ஐயங்கார் அவர்கள், தொடங்கிய இந்த நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது சேவைகளை, மோட்டார் தொழில், மோட்டார் சேவைகள் மற்றும் நிதி என பல துறைகளில் விரிவாக்கம் செய்தது.
இன்றும் கூட, எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லாமல், அவர் வெற்றிகரமான தொழிலதிபர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், ஒரு முன்னோக்கிய சிந்தனையாளராகவும், காந்திய தத்துவங்களைக் கடுமையாகப் பின்பற்றுபவராகவும் இருந்தார். அனைவரும் அவரது வாழ்க்கை, சாதனைகள் மற்றும் செயல்கள் பற்றித் தெரிந்து கொள்ள கீழ்வருவனவற்றை படிக்கவும்.
பிறப்பு: 1877
பிறந்த இடம்: திருநெல்வேலி, சென்னை மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு: ஏப்ரல் 28, 1955
தொழில்: தொழிலதிபர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு:
தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், இன்றைய தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்கருங்குடி என்ற ஊரில் 1877ல் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை:
தனது பள்ளிப்படிப்பை, திருநெல்வேலியுள்ள ஒரு பள்ளியில் தொடர்ந்த அவர், தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஒரு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டக்கல்வியில் தனது இளங்கலைப் பட்டத்தை வென்ற அவர், ஒரு வழக்கறிஞராக தனது தொழில்துறையைத் தொடங்கினார். பின்னர் இந்திய ரயில்வேயிலும், அதன் பின் ஒரு வங்கியிலும் வேலை செய்தார்.
தொழில்துறை:
எப்போதும் வணிகத்தின் மீது சுந்தரம் ஐயங்காருக்கு நாட்டம் இருந்ததால், அவர் தனது வேலையை விட்டு மோட்டார் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்தார். 1912 ஆம் ஆண்டு, மதுரையில் முதல் பஸ் சேவையை துவக்கினார். அவர் நிறுவிய ‘தி. வே.சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்’, ‘டி.வி. எஸ் குழு’ என்ற அமைப்பை உருவாக்க உதவியது. இரண்டாம் உலகப் போரின் போது, மக்கள் பெரும் பெட்ரோல் பற்றாக்குறையை எதிர்கொண்டனர்.
அப்போது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அவர் ‘டி.வி. எஸ் எரிவாயு ஆலையை’ வடிவமைத்துத் தொடங்கினார். அவர் ‘சுந்தரம் மோட்டார்ஸ் லிமிடெட்’ போன்ற தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், ரப்பர் மறைக்கிழித்தலுக்காகவும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார். இவை அனைத்திலும், 1950களில், ஜெனரல் மோட்டார்ஸின் மிகப்பெரிய விநியோகஸ்தராக ‘மெட்ராஸ் ஆட்டோ சர்விஸ் லிமிடெட்’ இருந்தது.
எனவே, ஒரு மனிதனின் பேரார்வத்தால் துவங்கப்பட்டது ஒரு தொழில், வளமான குடும்பத் தொழிலாக உருவானது. ‘டி.வி. எஸ்’ என்ற பெயரின் கீழ் நான்கு தனித்தனி கிளைகள் வேலை செய்யத் தொடங்கியது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் விநியோக நிறுவனம் என்ற பெருமை டி.வி. எஸ் குரூப்பிற்கே. இது 40,000 மில்லியன் வருவாயை ஈட்டுகிறது. இந்த குழு தானியங்கி பாகங்கள் உற்பத்தி, வாகன விற்பனை, மின்னணு, ஐ.டி மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகளில் 40,000 பேரை வேலையில் அமர்த்தி செயல்படுகிறது. அவர்கள் ஐ.டி தீர்வுகள் மற்றும் சேவைகளில் உள்ளன.
தொழிலதிபராக இருந்தாலும், அவர், ஒரு கலை ஆர்வலரும், முற்போக்கு சிந்தனையாளரும் கூட. இளம்வயதிலேயே கைம்பெண்ணான தனது மகளுக்கு, மகாத்மா காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார் வணிகத்திலிருந்து தானாக பணி ஓய்வை அறிவித்து, தன் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் தன்னுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்தார். இந்த செயலை காங்கிரஸ் மூத்த தலைவரான ராஜாஜி மிகவும் பாராட்டினார். தி. வே. சுந்தரம் அவர்களுக்கு, 5 மகன்களும் 3 மகள்களும் உண்டு. அவருக்கு உதவியாக, அவருடைய 5 மகன்களும் தொழிலில் இறங்கினர். இந்தியாவின் ‘நிதி தொழிலின் தந்தை’ என்று போற்றப்படும் நிறுவனமான ‘சுந்தரம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தை, தி. வே. சுந்தரத்தின் இளைய மகனான டி.சு.சந்தானம் நிறுவினார்.
பங்களிப்புக்கள்:
அவர், தென்னிந்திய மோட்டார் போக்குவரத்துத் துறை அமைக்க அடித்தளமாக இருந்தார். மதுரையில், முதல் பஸ் சேவையைத் தொடங்கிய பெருமை அவரையே சேரும். இரண்டாம் உலகப் போரின் போது, மக்கள் பெரும் பெட்ரோல் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். இதிலிருந்து மீள, அவர் ‘டி.வி. எஸ் எரிவாயு ஆலையை’ வடிவமைத்துத் தொடங்கினார். டி.வி. எஸ் குழுவின் கீழ் வரும் நிறுவனங்களில் சில:
1. வீல்ஸ் இந்தியா
2. ப்ரேக்ஸ்இந்தியா
3. சுந்தரம் ஃபாஸ்டநெர்ஸ்
4. டி.வி. எஸ் இன்ஃபோடெக்
5. டி.வி. எஸ் மோட்டார் கம்பெனி
6. இஸட்எஃப் எலெக்ட்ரானிக்ஸ் டி.வி. எஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்
7. சுந்தரம் ஃபைனான்ஸ்
8. டர்போ எனர்ஜி லிமிடெட்
9. ஆக்சல்ஸ் இந்தியா
10. சுந்தரம் கிளேட்டன்
11. லூகாஸ் டி.வி. எஸ்
12. சுந்தரம் மோட்டார்ஸ்
13. சுந்தரம் பிரேக் லைனிங்
14. டி.வி. எஸ் லாஜிஸ்டிக்ஸ்
15. டி.வி. எஸ் சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட்
16. சுந்தரம் ஹைட்ராலிக்ஸ் லிமிடெட்
பரம்பரைச்சொத்து:
‘தி. வே. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்’ அமைய காரணமாக இருந்த வரலாற்றை மீண்டும் காணலாம். திருக்குறுங்குடி வேங்ககுருஸ்வாமி சுந்தரம் ஐயங்கார், தனது இலாபகரமான ரயில்வே தொழிலை விட்டு விட்டு, தனது சொந்த தொழிலைத் தொடங்கினார். போக்குவரத்துத் தொழில் என்று எங்கேயும் கேள்விப்படாத காலத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில், முதன் முறையாக பஸ் சேவையை தொடங்கி, போக்குவரத்து வணிகத்தில் தனது முன்னிலையை உறுதிப்படுத்தினார்.
இறப்பு:
சுந்தரம் ஐயங்கார் அவர்கள், 78வது வயதில், ஏப்ரல் 28, 1955ல் கொடைக்கானலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
காலவரிசை:
1877: மதராஸ் மாகாணத்தில் உள்ள திருநெல்வேலியில் பிறந்தார்.
1911: அவர் ‘தி.வே.சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தை நிறுவினார்.
1923: அவர் நிறுவிய ‘தி.வே.சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்’, ‘டி.வி. எஸ் குழு’ என்ற அமைப்பை உருவாக்க உதவியது.
1955: அவர், கொடைக்கானலில் உள்ள அவரது இல்லத்தில் 78 வயதில் காலமானார்…..
0 comments:
Post a Comment